என்ன?
என்ன?
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசியல் கல்வியளித்து அரசியலில் விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்றும் இளைஞர் இயக்கம் தான் ‘அரசியல் அறிவு'. எப்படி ஐ.ஏ.எஸ் அகாடமிகள் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சியளித்து தயார்படுத்துகிறதோ, அதே போல அரசியல் அறிவு இயக்கம் ஆர்வமிக்க இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் கல்வியளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
எதற்கு?
அரசியல் என்றாலே சாக்கடை, குப்பை, ரவுடிசம் போன்ற எண்ணமே மக்களிடம் இருக்கிறது. இதனால் அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். உண்மையில், அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்பதால் தான் அரசியல் சாக்கடையாகவும் குப்பையாகவும் ரவுடிசமாகவும் மாறி நிற்கிறது.
மக்கள் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்பதால், நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் இப்படி ஒதுங்கி நிற்பது தான், அவர்களின் அத்தனைப் பிரச்சனைகளுக்குமான அடிப்படைக் காரணமாகும்.
இந்த நிலைமை மாற வேண்டுமென்றால், மக்களுக்கு அரசியலைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இப்படி விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால், தகுதியான அரசியல்வாதிகள் உருவாவார்கள். மக்களும் தகுதியான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
இதற்காக உருவாக்கப்பட்டது தான் ‘அரசியல் அறிவு' இயக்கம்!

எப்படி?
எப்படி?
அரசியல் அறிவு ‘காணொளி வகுப்பு’ மாடலில் செயல்படும் அரசியல் கல்வி முறையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சி தொடங்கி அரசு நிறுவனங்கள் வரை மொத்தம் 14 வகுப்புகள் உள்ளன. இந்த 14 வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 200+ காணொளிகள் உங்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன.
இந்த காணொளி வகுப்பை ‘தனிநபர், குழு’ என இரண்டு வடிவங்களில் நீங்கள் கற்கலாம். ‘தனிநபர்’ முறையில் online.arasiyalarivu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு கற்கலாம்.
‘குழு’ முறையில், உங்கள் ஊரில் ஒரு Chapter-யை உருவாக்கி குழுவாக இணைந்து கற்கலாம்.