Chapter என்றால் என்ன?
தமிழ்நாடெங்கும் அரசியல் கல்வியை கொண்டு சேர்ப்பதற்காக, ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் இளைஞர்களே தன்னார்வமாக ஒன்றுதிரண்டு நடத்தும் ‘குழு’ தான், Chapter.Chapter எப்படி இயங்கும்?
ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு வார இறுதி நாளில், Chapter பொறுப்பாளர்கள் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைப்பார்கள். இந்த பயிற்சி வகுப்பில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு அரசியல் அறிவு தொகுப்பு காணொளிகளைக் கண்டு விவாதித்து, அரசியல் கல்வி பெறுவார்கள்.பயிற்சி வகுப்புக்கான நிகழ்ச்சி நிரல்
அறிமுகவுரை
காணொளி திரையிடல்
குழு விவாதம்
ஒருங்கிணைப்பாளர் அமர்வு
நன்றியுரை
Chapter பொறுப்பாளர்கள் யார்?
1 தலைவர், 2 துணைத்தலைவர்கள், 1 செயலாளர், 1 பொருளாளர்
தலைவர்
துணைத்தலைவர் 1
“உறுப்பினர் சேர்க்கை”
“உறுப்பினர் சேர்க்கை”
துணைத்தலைவர் 2
“ தொழில்நுட்பம் ”
“ தொழில்நுட்பம் ”
செயலாளர்
பொருளாளர்
Chapter பொறுப்பாளர் பணிகள்
- 2 துணைத்தலைவர்கள், 1 செயலாளர், 1 பொருளாளர் ஆகிய 4 பொறுப்பாளர்களை இணைத்து, Chapter-யை உருவாக்குதல்
- துணைத்தலைவர்கள், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்பாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்
- ஒருங்கிணைப்பாளருடன் தகவல் தொடர்பு கொள்ளுதல்
- அனைத்து வகையான அறிவிப்புகளை வெளியிடுதல்
- பயிற்சி வகுப்பில் அறிமுகவுரை நிகழ்த்துதல்
- உறுப்பினர் சேர்க்கையை பொறுப்பேற்று நடத்தி 100 உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டுதல்
- சமூக வலைதள கணக்குகளை கையாண்டு, பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்
- Chapter செயல்பாட்டுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் கவனித்துக் கொள்ளுதல்
- பயிற்சி வகுப்பின் நிகழ்வுகள் மற்றும் நிறைகுறைகளை ஆவணப்படுத்துதல்
- மாதந்தோறும் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல்
- அரசியல் அறிவு அணியினருடன் தகவல் தொடர்பு கொள்ளுதல்
- சந்தா கட்டணம் வசூலித்தல்
- பணப்பரிமாற்றங்களை கையாளுதல்
- செலவுக்கணக்கை பராமரித்தல்